ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி


ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
x

கொல்கத்தா அணியை தவிர வேறு அணியில் விளையாட விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் .

மும்பை,

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் சமீபத்தில் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக இருந்த ரசல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ரசல்140 போட்டிகளில் விளையாடி, 174.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 2. 651 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 9.51 எகானமியில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா அணியை தவிர வேறு அணியில் விளையாட விருப்பம் இல்லை எனவும், அடுத்த சீசனில் கொல்கத்தா அணியின் 'பவர் கோச்' ஆக செயல்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story