இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் மணற்சிற்பம்

Image Courtesy: @ICC / @sudarsansand
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
புவனேஸ்வர்,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார்.






