நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு


நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு
x

image courtesy:PTI

நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளூரில் விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை,

நடப்பாண்டில் (2025) இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வரும் அக்டோபர் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.

இதனையடுத்து நவம்பர் - டிசம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 14-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

1 More update

Next Story