டி20 உலகக் கோப்பை - ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு

கடைசி நேரத்தில் வங்கதேசம் விலகிய நிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம் பிடித்தது.
சென்னை,
அடுத்த மாதம் 7ம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வங்கதேசம் விலகிய நிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து இடம் பிடித்துள்ளது.
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களால் இந்தியா பயணிக்க முடியாது என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் எனவும் வங்கதேசம் தெரிவித்தது.
இதையடுத்து வங்கதேச அணியின் இடமாற்ற கோரிக்கையை பரிசீலிக்க ஓட்டெடு நடத்தப்பட்டது. அதில் வங்கதேச அணியின் கோரிக்கைக்கு 16 ஐசிசி உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காலக்கெடு விதித்தது ஐசிசி. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணிக்காது என வங்கதேச அரசு தெரிவித்தது.
இதையடுத்து இந்த தொடரில் வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்தது. இதனால் இப்போது ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி அணிகளுடன் ஸ்காட்லாந்து அணி பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில், 15 வீரர்கள் கொண்ட ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிச்சி பெர்ரிங்டன் (கேப்டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சப்யான் ஷெரீப், மார்க் வாட், பிராட்லி வீல்






