தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் அட்வைஸ்


தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் அட்வைஸ்
x

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். 3 போட்டிகள் சேர்த்து மொத்தம் 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். குறிப்பாக 3-வது போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டிய அவர் சுமாரான ஷாட்டை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில் அனைத்து பந்துகளிலும் அதிரடியாக விளையாட முடியாது என்பதை உணர்ந்து சூர்யகுமார் யாதவ் விளையாட வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சூர்யகுமார் இத்தொடரில் தொடர்ச்சியாக மிகவும் எளிதாக தன்னுடைய விக்கெட்டை கொடுத்துள்ளார். அனைத்து நேரங்களிலும் அதிரடியாக விளையாட விரும்பினால் அதற்கு நீங்கள் சரியான பந்தை தேர்ந்தெடுப்பது அவசியம். அதே சமயம் அனைத்து பந்துகளிலும் உங்களால் பவுண்டரிகள் அடிக்க முடியாது. சூர்யகுமார் போன்ற இந்த காலத்து வீரர்கள் தங்களது திறமைக்கு அனைத்தையும் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அது அனைத்து நேரங்களிலும் சாத்தியம் கிடையாது. இந்தியா கம்பேக் கொடுப்பதற்கு இதே போல சுமாராக விளையாடக் கூடாது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் எல்லைகளை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் விளையாட வேண்டும்" என்று கூறினார்.

1 More update

Next Story