டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் 9 ஆண்டு கால சாதனையை முறியடிக்க உள்ள அபிஷேக் சர்மா


டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் 9 ஆண்டு கால சாதனையை முறியடிக்க உள்ள அபிஷேக் சர்மா
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது டி20 போட்டி நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா 82 ரன்கள் அடித்தால் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடிப்பார்.

அந்த வகையில், அபிஷேக் சர்மா இந்த ஆண்டில் மட்டும் 39 டி20 போட்டிகளில் ஆடி 1,533 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 82 ரன்கள் அடித்தால் இந்த வருடத்தில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 1,615 ரன்களை எட்டுவார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் 9 ஆண்டு கால சாதனையை அவர் முறியடிப்பார். விராட் கோலி கடந்த 2016-ம் ஆண்டு 31 டி20 போட்டிகளில் ஆடி 1,614 ரன்கள் அடித்துள்ளார்.

விராட் கோலியின் அந்த சாதனையை அபிஷேக் சர்மா இந்த போட்டியில் இல்லையென்றாலும் நடப்பு தென் ஆப்பிரிக்க தொடரிலேயே முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story