டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா


டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா
x

image courtesy:PTI

தினத்தந்தி 8 Nov 2025 3:49 PM IST (Updated: 8 Nov 2025 3:50 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் அடித்திருந்தபோது மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா 23 ரன்களுடனும், கில் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 11 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 1,000 ரன்களை அவர் வெறும் 528 பந்துகளில் அடித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. அபிஷேக் சர்மா - 528 பந்துகள்

2. சூர்யகுமார் யாதவ் - 573 பந்துகள்

3. பில் சால்ட் - 599 பந்துகள்

4. கிளென் மேக்ஸ்வெல் - 604 பந்துகள்

5. ஆந்த்ரே ரசல்/ பின் ஆலன் - 609 பந்துகள்

அதேபோல் குறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். அபிஷேக் 28 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 27 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

1 More update

Next Story