டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்


டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த ஆப்கானிஸ்தான்
x

image courtesy: @ACBofficials

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றிய ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது.

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த டி20 தொடரின் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செயத ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 210 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 92 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவான்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 9 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றிய ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது.

1 More update

Next Story