ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

Image Courtesy: @ZimCricketv
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஜிம்பாப்வே வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், இந்த டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி விவரம்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரைன் பென்னட், ரியான் பர்ல், கிரேமி க்ரெமர், பிராட் எவான்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவான்ஷே மருமனி, வெல்லிங்டன் மசகட்சா, டோனி முனியாங்கோ, தஷிங்கா முசேகிவா, பிளெசிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் ங்வாரா, பிரண்டன் டெய்லர்.
Related Tags :
Next Story






