வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

வெல்லிங்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 5ம் தேதி நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் டிம் செய்பர்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது காயத்தை சந்தித்த டிம் செய்பர்ட் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மிட்செல் ஹே மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com