டி20 உலகக்கோப்பை 2026: விளையாட உள்ள 20 அணிகளின் முழு விவரம்

இந்த தொடருக்கு கடைசி அணியாக ஐக்கிய அரபு அமீரகம் தகுதி பெற்றுள்ளது.
மஸ்கட்,
20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
இதில் ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன.
இந்த சூழலில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, ஜப்பானை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஜப்பான் 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் டாப்-3 இடத்தை உறுதி செய்ததுடன், உலகக்கோப்பை போட்டிக்கு 20-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெற்றது.
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள 20 அணிகளின் விவரம்:
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்.






