டி20 உலகக் கோப்பை: நேபாளம் அணி அறிவிப்பு

இந்த அணிக்கு ரோகித் பவுதேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான நேபாளம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோகித் பவுதேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாள அணி:
ரோகித் பவுதேல், திபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சனே, குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், சுந்தீப் ஜோரா, ஆரிப் ஷேக், பசீர் அகமது, சோம்பால் கமி, கரண் கே.சி, நந்தன் யாதவ், குல்ஷன் ஜா, லலித் ராஜ்பன்ஷி, ஷேர் மல்லா, லோகேஷ் பம்.
Related Tags :
Next Story






