டெஸ்ட் கிரிக்கெட்: 3000 ரன்களை கடந்த எய்டன் மார்க்ரம்


டெஸ்ட் கிரிக்கெட்: 3000 ரன்களை கடந்த எய்டன் மார்க்ரம்
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 13 Oct 2025 9:45 PM IST (Updated: 13 Oct 2025 9:46 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 67 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் எய்டன் மார்க்ரம் 20 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் (3013 ரன்) 3000 ரன்களை கடந்தார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3013 ரன்கள் குவித்துள்ளார். அதில் 8 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்கும்.

1 More update

Next Story