டெஸ்ட் கிரிக்கெட்: டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்


டெஸ்ட் கிரிக்கெட்: டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் 5 கேட்ச் பிடித்தார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) கடந்த 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 334 ரன்களும், ஆஸ்திரேலியா 511 ரன்களும் எடுத்தன.

பின்னர் 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 75.2 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பீல்டிங்கில் அசத்திய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மொத்தம் 5 கேட்ச் பிடித்தார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 210-ஆக உயர்ந்தது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச் செய்த பீல்டர்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார். இதில் முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (213 கேட்ச்) உள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜோ ரூட் - 213 கேட்ச்

2. ராகுல் டிராவிட்/ ஸ்டீவ் ஸ்மித் - 210 கேட்ச்

3. ஜெயவர்த்தனே - 205 கேட்ச்

4. ஜாக் காலிஸ் - 200 கேட்ச்

5. ரிக்கி பாண்டிங் - 196 கேட்ச்

1 More update

Next Story