இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய வீரர் நீக்கம்

இந்த தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கயானா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் கழற்றி விடப்பட்டார். அதே சமயம் முன்னாள் வீரர் சந்தர்பாலின் மகனான தேஜ்நரின் சந்தர்பால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-
ேராஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிகன், கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதானேஸ், ஜான் கேம்ப்பெல், தேஜ்நரின், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப், டேவின் இன்லாச், அல்ஜாரி ஜோசப், ஷமார் ஜோசப், பிரன்டன் கிங், ஆண்டர்சன் பிலிப், காரி பியார், ஜெய்டன் சீல்ஸ்.
Related Tags :
Next Story






