ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

Image Courtesy: @ACBofficials
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் ஹராரேவில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கபட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும், இப்ராஹிம் ஜட்ரான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான், அப்துல் மாலிக், அப்சர் ஜசாய் (விக்கெட் கீப்பர், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), பஹீர் ஷா, ஷகிதுல்லா கமல், இஸ்மாத் அலாம், ஷரபுதீன் அஷ்ரப், ஜியா உர் ரஹ்மான் அக்பர், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் ஷரிபி, கலீல் குர்பாஸ், பாஷிர் அகமது.
ரிசர்வ் வீரர்கள்: இப்ராஹிம் அப்துல்ரஹிமித்சாய், செடிகுல்லா அடல், ஷாம்ஸ் உர் ரஹ்மான்.
ஆப்கானிஸ்தான் டி20 அணி: ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் ஜட்ரான் (துணை கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், டார்விஷ் ரசூலி, ஷகிதுல்லா கமல், இஜாஸ் அகமது அஹ்மத்சாய், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ஷரபுதீன் அஷ்ரப், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், பாஷிர் அகமது, பரீத் அகமது மாலிக், அப்துல்லா அஹ்மத்சாய்.
ரிசர்வ் வீரர்கள்: ஏ எம் கசன்பர், பரீதூன் டவூட்சாய்.






