வீரர்களின் பேட்டை சோதனை செய்த நடுவர்கள்.. காரணம் என்ன..?


வீரர்களின் பேட்டை சோதனை செய்த நடுவர்கள்.. காரணம் என்ன..?
x

image courtesy: twitter

தினத்தந்தி 14 April 2025 3:50 PM IST (Updated: 14 April 2025 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஹர்திக், ஹெட்மேயர் உள்ளிட்ட வீரர்களின் பேட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, (மாலை) மற்றும் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் (இரவு) அணிகள் மோதின. இதில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன. இந்த ஆட்டங்களின்போது வழக்கத்திற்கு மாறாக நடுவர்கள் திடீரென வீரர்கள் பயன்படுத்திய பேட்டை சோதனை செய்தனர்.

இதற்கான காரணம் என்னவெனில், வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்தனர். இந்த விதிப்படி வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அளவு அகலம்: 4.25 அங்குலம் நீளம்: 2.64 அங்குலம் மற்றும் விளிம்புகள்: 1.56 அங்குலம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய போட்டிகளில் நடுவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அதன் காரணமாக அதிரடி வீரர்களான ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மேயர், பெங்களூரு வீரர் பில் சால்ட், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டவர்களின் பேட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

1 More update

Next Story