டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதல்


டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் இன்று மோதல்
x

image courtesy: twitter/ @GrandCholasTNPL/@TNPremierLeague

தினத்தந்தி 10 Jun 2025 8:48 AM IST (Updated: 10 Jun 2025 10:35 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 7-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

கோவை,

9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஸ்டேடியத்தில் 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறுகின்ற 7-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.15 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

1 More update

Next Story