டி.என்.பி.எல்.: 2-வது வெற்றியை பெறப்போவது யார்..? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை அணிகள் இன்று மோதல்


டி.என்.பி.எல்.: 2-வது வெற்றியை பெறப்போவது யார்..? சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை அணிகள் இன்று மோதல்
x

இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் வென்றுள்ளன.

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மறுபுறம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.

தற்போது இரு அணிகளும் 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

1 More update

Next Story