இன்று சிறப்பான நாளாக அமையும்...இந்திய கேப்டன் நம்பிக்கை


இன்று சிறப்பான நாளாக அமையும்...இந்திய கேப்டன் நம்பிக்கை
x

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன

மும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் இறுதிப்போட்டி தொடர்பாக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது,

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றால் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இறுதி ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் எப்படி உணர்வோம் என்பதை எதிர்நோக்குகிறோம். இன்று எங்களுக்கு ஒரு சிறப்பாக நாளாக அமையும் என்று நம்புகிறோம்.

நாங்கள் இந்த போட்டிக்காக கடினமாக நிறைய உழைத்து இருக்கிறோம். நாங்கள் நாளை எப்படி சிறப்பாக செயல்படுகிறோம் என்பதே முக்கியம். எனக்கும், அணிக்கும் இது பெருமைக்குரிய தருணமாகும். கடந்த 2 ஆட்டங்களில் நாங்கள் விளையாடிய விதத்தை பார்த்து ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படும் என்று நான் நம்புகிறேன். எங்கள் அணியினர் உற்சாகமாக உள்ளனர். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கின்றனர். இறுதிப்போட்டியை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

1 More update

Next Story