முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு


முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:twitter/@ProteasMenCSA

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

ஹராரே,

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடமும், தென் ஆப்பிரிக்கா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. எல்லா ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே அணி வெளியேறியது.

இதனையடுத்து இந்த தொடரின் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story