முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

image courtesy:twitter/@ZimCricketv
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 61 ரன்கள் அடித்தார்.
ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் நிலைத்து விளையாடினார். ஆனால் அவருக்கு யாரும் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஆன வெஸ்லி மாதவரே 13 ரன்களிலும், கிளைவ் மடன்ட் 8 ரன்களிலும், சிக்கந்தர் ராசா 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
அடுத்து வந்த ரியான் பர்ல் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் பென்னட் அரைசதம் கடந்தார். நிலைத்து விளையாடிய பென்னட் 61 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களால் அதிரடி காட்ட முடியவில்லை. தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக பந்துவீசியது.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் அடித்துள்ளது. ரியான் பர்ல் 36 ரன்களுடனும், மபோசா 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.






