விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

image courtesy:PTI
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜெகதீசன் தலைமையிலான அந்த அணியில் சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், சாய் கிஷோர் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அணி விவரம் பின்வருமாறு:- ஜெகதீசன் (கேப்டன்), சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன் பால், ஆந்த்ரே சித்தார்த், பூபதி வைஷ்ண குமார், முகமது அலி, அதிஷ், சாய் கிஷோர், சச்சின் ரதி, குர்ஜப்னீத் சிங், அச்யூத், கோவிந்த், சோனு யாதவ், சன்னி சந்து, கார்த்திக் மணிகண்டன்.
Related Tags :
Next Story






