விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணி தோல்வி


விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணி தோல்வி
x

ராஜஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை ,

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் ஜெகதீசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 46.5 ஓவர்கள் முடிவில் 225 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் தீபக் ஹூடா அரைசதமடித்தார். தமிழ்நாடு அணியில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 226 ரன்கள் இலக்குடன் விளையாடிய தமிழ்நாடு அணி 41.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெகதீசன் 71 ரன்களும் , ஆதிஷ் ஆர் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அசோக் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் ராஜஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ்நாடு அணிக்கு இது 4வது தோல்வியாகும்

1 More update

Next Story