விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங் அதிரடி... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 212 ரன்கள் குவிப்பு


விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங் அதிரடி... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 212 ரன்கள் குவிப்பு
x

Image Couurtesy: @TNPremierLeague

தினத்தந்தி 9 Jun 2025 9:06 PM IST (Updated: 10 Jun 2025 10:36 AM IST)
t-max-icont-min-icon

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஆஷிக் 54 ரன்கள் எடுத்தார்.

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கே ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிஹரன் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் மொஹித் ஹரிஹரன் 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் கண்ட பாபா அபராஜித் 41 ரன்னில் அவுட் ஆனார். நிலைத்து நின்று ஆடிய ஆஷிக் அரைசதம் அடித்த அசத்திய நிலையில் 54 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து விஜய் சங்கர் மற்றும் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஸ்வப்னில் சிங் களம் இறங்கினார். விஜய் சங்கர் - ஸ்வப்னில் சிங் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். இதில் ஸ்வப்னில் 14 பந்தில் 45 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்தது. சேப்பாக் தரப்பில் அதிகபட்சமாக ஆஷிக் 54 ரன்கள் எடுத்தார். நெல்லை தரப்பில் யுதீஷ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி ஆட உள்ளது.

1 More update

Next Story