2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் விராட் கோலி


2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் விராட் கோலி
x

image courtesy:PTI

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி ஆவார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில், 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 10 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. அந்த வகையில் இதில் இடம்பெற்றுள்ள 10 வீரர்களின் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக 3 நியூசிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-

1. விராட் கோலி (இந்தியா)

2. மேத்யூ பிரீட்ஸ்கே (தென் ஆப்பிரிக்கா)

3. ஜோ ரூட் (இங்கிலாந்து)

4. ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்)

5. டேரில் மிச்செல் (நியூசிலாந்து)

6. மேட் ஹென்றி (நியூசிலாந்து)

7. அடில் ரஷீத் (இங்கிலாந்து)

8. ஜேடன் சீல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

9. சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே)

10. மிட்சல் சாண்ட்னர் (நியூசிலாந்து)

1 More update

Next Story