ஐபிஎல் மினி ஏலம் எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்

வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது
ஐபிஎல் மினி ஏலம் எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்
Published on

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதனிடையே டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதி நடத்தப்படுகிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் ஏலத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com