இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது..? ஜாகீர் கான் கணிப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி 29-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி 29ம் தேதி நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி குறித்து இந்திய முன்னாள் வீரரான ஜாகீர் கான் தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது கணிப்பின் படி, இந்த தொடரை இந்தியா கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தொடரில் இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா அசத்துவார் என்றும் ஆஸ்திரேலியா தரப்பில் டிராவி ஹெட் அசத்துவார் என்றும் அவர் கணித்துள்ளார்.






