ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 'ரிட்டயர்டு அவுட்' ஆன வீரர்கள் யார்..? யார்..?

image courtesy: BCCI
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் ஆனார்.
லக்னோ,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா (25 ரன், 23 பந்து, 2 பவுண்டரி) தொடர்ந்து தடுமாறியதால் அவரை 19-வது ஓவரில் 'ரிட்டயர்டு அவுட்' முறையில் மும்பை நிர்வாகம் வெளியேற்றியது. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட மிட்செல் சாண்ட்னராலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.
மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் 'ரிட்டயர்டு அவுட்' ஆன 4-வது வீரர் என்ற மோசமான சாதனைக்கு திலக் வர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 'ரிட்டயர்டு அவுட்' முறையில் வெளியேறியுள்ளனர்.
அந்த பட்டியல்:-
1. ரவிச்சந்திரன் அஸ்வின்
2. அதர்வா தைடே
3.சாய் சுதர்சன்
4. திலக் வர்மா






