வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா ? ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்


வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா ?  ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்
x

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

புதுடெல்லி ,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் 13-வது லீக் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது . இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோது கின்றன. ஹர்மன்பிரீத் கவூர் தலை மையிலான இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3- வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மகளிர் அணி அணி தொடக்க போட்டியில் இலங்கையை 59 ரன் வித்தியாசத்திலும் (கவு காத்தி), 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 88 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

1 More update

Next Story