மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - யு.ஏ.இ அணிகள் இன்று மோதல்


மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - யு.ஏ.இ அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @ACCMedia1

தினத்தந்தி 21 July 2024 12:44 PM IST (Updated: 21 July 2024 1:40 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா - யு.ஏ.இ அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. யு.ஏ.இ அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தனது வெற்றிப்பயணத்தை நீட்டிக்க இந்தியா களம் இறங்கும், அதேவேளையில் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய யு.ஏ.இ கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இரவு 7 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் ஆட உள்ளன. இரு ஆட்டங்களும் தம்புல்லாவில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

1 More update

Next Story