மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்திய அயர்லாந்து


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்திய அயர்லாந்து
x

Image Courtesy: @ICC

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

பெல்பாஸ்ட்,

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 288 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக சாரா போர்ப்ஸ் 54 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் கெலிஸ் நத்லோவு 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 97 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சிப்போ முகேரி-டிரிபனோ 48 ரன் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

1 More update

Next Story