மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு எதிராக உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்
நவிமும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
உபி வாரியர்ஸ்:
டியான்ட்ரா டோட்டின், மெக் லேனிங், போப் லிட்ச்பீல்ட், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, கிரண் நவ்கிரே, ஸ்வேதா செஹ்ராவத், ஆஷா சோபனா, சோபி எக்லெஸ்டோன், ஷிகா பாண்டே, கிராந்தி கவுட்
குஜராத்:
சோபி டிவைன், பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், அனுஷ்கா ஷர்மா, கனிகா அஹுஜா, பார்தி ஃபுல்மாலி, காஷ்வீ கவுதம், தனுஜா கன்வார், ராஜேஸ்வரி கயக்வாட், ஜார்ஜியா வேர்ஹாம், ரேணுகா சிங் தாக்கூர்.






