மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியின் புதிய கேப்டனாகும் இந்திய முன்னணி வீராங்கனை..?

image courtesy:PTI
மெக் லானிங்கை ஏலத்திற்கு முன் டெல்லி அணி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. நவிமும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய முன்னணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லானிங்கை ஏலத்திற்கு முன் டெல்லி அணி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






