மகளிர் டி20 கிரிக்கெட்; ஜிம்பாப்வேயை வீழ்த்திய அயர்லாந்து

Image Couortesy: @ICC
அயர்லாந்து தரப்பில் கேபி லூயிஸ் 67 ரன் எடுத்தார்.
டப்ளின்,
ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சிப்போ முகேரி 42 ரன் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் காரா முர்ரே 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த அயர்லாந்து 16.5 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அயர்லாந்து தரப்பில் கேபி லூயிஸ் 67 ரன் எடுத்தார்.
Related Tags :
Next Story






