மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 17 Oct 2025 9:15 AM IST (Updated: 17 Oct 2025 9:16 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

கொழும்பு,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் கொழும்புவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும், இலங்கை 7வது இடத்திலும் உள்ளன.

1 More update

Next Story