மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அதிரடி காட்டினர்
மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
Published on

விசாகப்பட்டினம்,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று விசாகப்பட்டினத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ஜார்ஜியா பிளிம்மர் (43 ரன்கள்), அமெலியா கெர் (35 ரன்கள்), சோபி டிவைன் (23 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 38.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லின்சே ஸ்மித் 3 விக்கெட்டுகளும், நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அலைஸ் கேப்சி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்துவிளையாடியது.

தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.

சிறப்பாக விளையாடிய அமி ஜோன்ஸ் அரைசதமடித்தார். இறுதியில் 29.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அமி ஜோன்ஸ் 86 ரன்களும், டம்மி பியூமான்ட் 40 ரன்களும், ஹீதர் நைட் 33 ரன்களும் எடுத்தனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com