மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்


இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

மும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் தற்சமயம் நவிமும்பையில் மழை பெய்வதன் காரணமாக இந்த போட்டிகான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story