மகளிர் உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்


மகளிர் உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
x

20-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தூர்,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இந்தூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. . இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி அதிகரிப்பதுடன் அரையிறுதி வாய்ப்பும் சிக்கலாகும்.

இங்கிலாந்து அணி தனது முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளை வரிசையாக வீழ்த்தியது . பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து மழையால் தோல்வியில் இருந்து தப்பியது. இங்கிலாந்து இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அரையிறுதியை உறுதி செய்து விடும்.

வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியும், அதேநேரத்தில் அரையிறுதியை உறுதிப்படுத்த இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story