மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

image courtesy:ICC
நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.
வெலிங்டன்,
13-வது மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சோபி டெவின் தலைமையிலான அந்த அணியில் சுசி பேட்ஸ், லியா தஹுஹு, மேடி கிரீன் போன்ற முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி விவரம்: சோபி டெவின் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன்,ப்ளோரா டெவன்ஷயர், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ப்ரீ இல்லிங், பாலி இங்கிலிஸ், பெல்லா ஜேம்ஸ், மெலி கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ஜார்ஜியா பிளிம்மர், லியா தஹுஹு
நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.






