மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

Image Courtesy: @ICC
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
உலகக்கோப்பை தொடர் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து 5வது இடத்திலும், இலங்கை 7வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






