கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி அபாரம்...இன்டர் மியாமி அணி வெற்றி


கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி அபாரம்...இன்டர் மியாமி அணி வெற்றி
x

டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

அட்லாண்டா ,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இதில் நேற்று குரூப் ஏ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இன்டர் மியாமி (அமெரிக்கா), போர்டோ (போர்ச்சுகல்) அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் மியாமி அணியில் செகோவியா, கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தனர்.

1 More update

Next Story