உலகக் கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.452 கோடி பரிசு


உலகக் கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.452 கோடி பரிசு
x

அதாவது போட்டியில் களம் காணும் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது ரூ.94½ கோடி கிடைப்பது உறுதி.

நியூயார்க்,

நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்பட 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான பரிசுத்தொகையை முந்தைய உலகக் கோப்பை விட உயர்த்தி ‘பிபா’ நிதி கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6,575 கோடியாகும். பட்டம் வெல்லும் அணி இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.452 கோடியை பரிசாக அள்ளும். 2022-ம் ஆண்டில் அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்ற போது ரூ.380 கோடியை பரிசாக பெற்றிருந்தது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.298 கோடி கிடைக்கும்.

ஒவ்வொரு அணிக்கும் போட்டிக்கு தயாராவதற்கு ரூ.13½ கோடி அளிக்கப்படும். அத்துடன் லீக் சுற்றுடன் வெளியேறும் 33 முதல் 48-வது இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ.81 கோடி வழங்கப்படும். அதாவது போட்டியில் களம் காணும் ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது ரூ.94½ கோடி கிடைப்பது உறுதி.

1 More update

Next Story