1.50 லட்சம் மக்கள் தொகை தான்....கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு

உலகக் கோப்பை கால்பந்தில் பிரவேசிக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சாதனையை படைத்தது.
1.50 லட்சம் மக்கள் தொகை தான்....கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு
Published on

வில்லெம்ஸ்டாட்,

அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு குராக்கோ முதல்முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் பிரவேசிக்கும் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சாதனையை படைத்தது.

'பி பிரிவில் ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் அரங்கேறிய குராக்கோ- ஜமைக்கா அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. லீக் முடிவில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள குராக்கோ 3 வெற்றி, 3 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்து முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்குள் கால்பதித்தது.

கரிபீயன் தீவுகளில் ஒன்றான குராக்கோவில் தற்போது 1 லட்சத்து 56 ஆயிரத்து 115 மக்கள் வசிக்கிறார்கள். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு ஐஸ்லாந்து தகுதி கண்ட போது அந்த நாட்டின் மக்கள் தொகை 3 லட்சத்து 50 ஆயிரமாக இருந்தது. அதுவே முன்னதாக உலக கோப்பை போட்டிக்குள் கால்பதித்த குட்டி தேசமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com