உலகக் கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியா அணி தகுதி

தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியா அணி தகுதி
Published on

ரிஜோகா,

23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் எல் பிரிவில் இடம் பிடித்துள்ள குரோஷியா அணி நேற்று முன்தினம் இரவு ரிஜோகாவில் நடந்த லீக் ஆட்டத்தில் பாரோ தீவை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாரோ தீவை வீழ்த்தியது. 7-வது ஆட்டத்தில் ஆடிய குரோஷியா அணி 6 வெற்றி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை உறுதி செய்தது. இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் குரோஷியா உலகக் கோப்பை போட்டிக்கு 7-வது முறையாக தகுதி பெற்றது. குரோஷியாவையும் சேர்த்து 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு இதுவரை 30 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com