உலகக் கோப்பை கால்பந்து போட்டி- 26 ஆண்டுகளுக்கு பிறகு நார்வே தகுதி

இத்தாலியை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நார்வே அணி தகுதி பெற்றுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மிலன்,

48 அணிகள் இடையிலான 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற நாட்டு அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் ஐ பிரிவில் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நார்வே அணி, 4 முறை சாம்பியனான இத்தாலியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இத்தாலி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும், பின்பாதியில் அந்த அணி நார்வேயின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. முடிவில் நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம் தனது பிரிவில் 24 புள்ளிகளுடன் (8 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடத்தை உறுதி செய்த நார்வே அணி 26 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. மொத்தத்தில் அந்த அணி உலகக் கோப்பையில் 4-வது முறையாக அடியெடுத்து வைக்கிறது. இந்த பிரிவில் 2-வது இடம் பெற்ற இத்தாலி (18 புள்ளி) பிளே-ஆப் சுற்றில் ஆடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com