ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தல்

image courtesy:twitter/@TheHockeyIndia
வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின.
சென்னை,
14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு தொடங்கிய வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் எழுச்சி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது.
முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.






