ஒலிம்பிக் கனவு நினைவாகியது - இந்திய ஆக்கி வீரர்

image courtesy: Hockey India
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது தன்னுடைய சிறுவயது கனவு என்று அபிஷேக் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய ஆக்கி அணியில் அபிஷேக் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் முதல் முறையாக ஒலிம்பிக் தொடரில் களமிறங்க உள்ள அபிஷேக் கூறுகையில், " எனக்கு 14 வயதிலிருந்தே ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது அது நினைவாகியுள்ளது. இது ஒரு பாக்கியம் மற்றும் பொறுப்பு. நான் இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்ததை செய்து முழு நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன். பெரிய போட்டிகளின் அழுத்தம் என்னை தடுக்கவோ அல்லது எனது அணுமுறையை மாற்றவோ இல்லை" என்று கூறினார்.
Related Tags :
Next Story






