பாரீஸ் ஒலிம்பிக் கோல்ப் போட்டி; 29-வது இடம் பிடித்த அதிதி அசோக்


பாரீஸ் ஒலிம்பிக் கோல்ப் போட்டி; 29-வது இடம் பிடித்த அதிதி அசோக்
x

Image Courtesy : AFP

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோல்ப் போட்டியின் இறுதிசுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்தின் லிடியா கோ (278 புள்ளி) தங்கப்பதக்கமும், ஜெர்மனியின் எஸ்தர் ஹென்ஸ்லிட் (280 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், சீனாவின் ஜானெட் லின் ஜியு (281 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அதிதி அசோக் (290 புள்ளி) 29-வது இடமும், மற்றொரு வீராங்கனை தீக்ஷா தாகர் (301 புள்ளி) 49வது இடமும் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

1 More update

Next Story