பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்ட இந்திய ஆண்கள் அணி


பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்ட இந்திய ஆண்கள் அணி
x

Image Courtesy: PTI

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய ஆண்கள் அணி சீனாவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற செட் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியா தரப்பில் ஹர்மீத் தேசாய் - மானவ் விகாஷ் தக்கர் இணை (இரட்டையர் பிரிவு), சரத் கமல், மானவ் விகாஷ் தக்கர் (ஒற்றையர் பிரிவு) தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.


Next Story